அராபத் மரணம்: இஸ்ரேல் மீதான சந்தேகங்கள் "கேலிக்கிடமானவை"

Image caption அராபத்: மரணம் குறித்த சந்தேகங்கள்

பாலத்தீனத் தலைவர் யாசர் அராபத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் இஸ்ரேல் ஈடுபட்டிருக்கக்கூடும் என்பதாக வரும் யூகங்கள் கேலிக்கிடமானவை என்று இஸ்ரேலிய அரசு கூறியிருக்கிறது.

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த அராபத்தின் மரணம் குறித்த கேள்விகள் மீண்டும் ஒரு முறை எழுந்திருக்கும் நிலையில் இஸ்ரேல் இந்த பதிலை அளித்தது.

அராபத்தின் உடைகள் மற்றும் உடமைகள் சிலவற்றின் மீது மிகவும் விஷத்தன்மை மற்றும் கதிரியக்கம் வாய்ந்த பொருளான போலோனியம் இருந்ததாக முன்பு வந்த செய்திகளை சுவிட்சர்லாந்து சோதனைக்கூடம் ஒன்று உறுதிப்படுத்தியிருக்கிறது.

அராபத்தின் உடலில் போலோனியத் துகள்கள் படிந்திருக்கின்றனவா என்பதை சோதித்துப் பார்க்க, அவரது உடலிலிருந்து திசு மாதிரிகளை எடுப்பதற்காக, அவரது உடல் கடந்த ஆண்டு அது புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்டது.

இந்த சோதனைகளை நடத்திய ரஷ்ய சோதனைக்கூடத்தின் தலைவர் , அதிகாரபூர்வமற்ற வகையில் கருத்து தெரிவிக்கையில்,தங்களது இந்த ஆராய்ச்சியில் இது வரை விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறினார்.