ஐபோன் வாங்க குழந்தையை விற்ற சீனத் தம்பதியர் மீது வழக்கு

Image caption ஐபோனுக்காக குழந்தையை விற்ற வழக்கு

சீனாவில் தங்களது குழந்தையை ஐபோன் மற்றும் பிற பொருட்களை வாங்குவதற்காக பணம் திரட்ட விற்றதாகக் குற்றம் சாட்டப்படும் ஒரு இளம் தம்பதியினர் மீது வழக்கு போடப்படும் என்று சீன அரச் ஊடகங்கள் கூறுகின்றன.

தங்கள் குழந்தை கருவில் இருக்கும்போதே இதை விற்க 8,000 டாலர்கள் கேட்டு இணையத்தில் இந்தத் தம்பதியினர் விளம்பரம் கொடுத்திருந்தனர்.

இந்தப் பெண் குழந்தை பிறந்தவுடன்,அக்குழந்தையை பெரிய அளவு தொகை ஒன்றுக்கு விற்றதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

தங்களது மூன்றாவது குழந்தையான இந்தப் பெண் குழந்தை தங்களால் தர முடிந்ததை விட மேலும் நல்ல வாழ்க்கை அமையவே தாங்கள் விரும்பியதாக அந்தத் தம்பதியினர் போலிசாரிடம் கூறினர்

கடந்த ஆண்டுதான்,சீன பதின்பருவ இளைஞர் ஒருவர்,ஐபோன் மற்றும் ஐபேட் வாங்குவதற்காக, தனது சிறுநீரகத்தை விற்றார்.)