மாலத்தீவு : 'தற்காலிக அதிபரின் கீழ் தேர்தல் நடக்க வேண்டும்'

ஆதரவாளர்களுடன் முஹமட் நஷீட்
Image caption ஆதரவாளர்களுடன் முஹமட் நஷீட்

மாலத்தீவின் தேர்தலை பொலிஸார் பலவந்தமாக பிற்போட்டதை அடுத்து, ஒரு காபந்து அதிபரின் கீழ், புதிய அதிபர் தேர்தலை நடத்துமாறு, அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான முஹமட் நஷீட் கோரியிருக்கிறார்.

பதவிக்காலம் முடிவடையும் தற்போதைய அதிபரான முஹமட் வாஹிட் அவர்கள் உடனடியாக இராஜினாமா செய்துவிட்டு, புதிய தேர்தலை நடத்துவதற்கு, நடாளுமன்ற சபாநாயகரை அனுமதிக்க வேண்டும் என்றும் நஷீட் கேட்டிருக்கிறார்.

வாஹிட் அவர்கள்தான் சனிக்கிழமை பொலிஸாரைப் பயன்படுத்தி தேர்தலை நிறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வாக்காளர் பட்டியலை, தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களில் இருவர் அங்கீகரிக்கவில்லை என்று கூறி, வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் ஆணையத்தில் இருந்து வெளியே போவதை பொலிஸார் தடுத்து விட்டனர்.