ஆஸி. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ; அவசரநிலை பிரகடனம்

Image caption கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான காட்டுத் தீ இது என மாநில அதிகாரிகள் கூறுகின்றனர்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவியுள்ள காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசரநிலை பிரகடனத்தின் மூலம் அதிகாரிகாரிகள் மக்களை வீடுகளை வெளியேற்ற முடியும். தேவைப்பட்டால் மின்சார விநியோகத்தை துண்டிக்கவும் முடியும்.

அங்கு வெப்பக் காலநிலை மீண்டும் தொடரும் என்றும் கடுமையான காற்று வீசும் என்றும் வானிலை முன்னறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

அதனால் அடுத்துவரும் நாட்களிலும் காட்டுத் தீ வேகமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மோசமான இந்தக் காட்டுத் தீயில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. தீ இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பரவிக்கொண்டே இருக்கிறது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை பருவகாலத்துக்கு முன்னரே காட்டுத் தீ ஏற்பட்டுள்ளமை, பருவநிலை மாற்றங்கள் தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.