இளவரசர் ஜோர்ஜ் ஞானஸ்நான நிகழ்வு எளிமையாக நடந்தது

Image caption இளவரசர் ஜோர்ஜ் இன்று முதல் இங்கிலாந்து திருச்சபையின் உறுப்பினர் ஆகிறார்

பிரிட்டிஷ் முடிக்குரிய இளவரசர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள, புதிய வாரிசான இளவரசர் ஜோர்ஜின் ஞானஸ்நான நிகழ்வு லண்டனில் இன்று நடந்தது.

வழமைக்கு மாறாக, அரச குடும்பத்தின் இந்த நிகழ்வு ஆடம்பரமின்றி மிக எளிமையாக நடந்துள்ளது.

21 விருந்தினர்களுடன் பெற்றோரான இளவரசர் வில்லியமும் கெத்தரினும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஞானப் பெற்றோர்கள் 7 பேரில் ஒருவர் மட்டும்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இளவரசர் வில்லியமின் அத்தை மகளும் ஒலிம்பிக் குதிரைப் பந்தைய வீராங்கனையுமான சாரா பிலிப்ஸ் தான் அவர்.

இந்த ஞானஸ்நான நிகழ்வுக்குப் பின்னர் மூன்று மாதக் குழந்தையான ஜோர்ஜ் இங்கிலாந்து திருச்சபையின் உறுப்பினராக இணைந்துகொண்டுள்ளார்.