மார்சல் டிட்டோவின் மனைவி காலமானார்

யூகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபரான காலஞ்சென்ற மார்சல் டிட்டோவின் மனைவியான ஜோவன்கா ஃபுறோஸின் இறுதி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பெல்கிரேட்டில் நடந்த இறுதி ஆராதனையில், சேர்பிய பிரதமர் தலைமை தாங்கி அஞ்சலி உரை நிகழ்த்தினார்.

Image caption தனது கணவர் டிட்டோவுடன் ஃபுறோஸ்

தனது 88வது வயதில், கடந்த வாரம் காலமான ஃபுறோஸ் அவர்கள், முழு இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்.

பல யூகோஸ்லாவியர்களின் மரியாதைக்குரிய, நேசமிக்க ஒருவராக இவர் ஒரு காலத்தில் திகழ்ந்தார்.

ஆனால், 1980களில் தனது கணவர் இறந்த பின்னர் இவர் ஒரு மறக்கப்படவராக வாழ்ந்துவந்தார்.