சஹாரா பாலைவனத்தைக் கடக்கமுயன்ற 87 பேர் சடலங்களாக மீட்பு

Image caption நைஜரிலிருந்து சுமார் 80 ஆயிரம் பேர் சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது

நைஜரில் சஹாரா பாலைவனத்தை கடக்க முயன்றபோது, இடைநடுவில் வாகனம் பழுதடைந்த காரணத்தால் குடிக்க நீரின்றி தாகத்தால் உயிரிழந்த 87 பேரின் சடலங்களை மீட்டுள்ளதாக நைஜரிலுள்ள மீட்புப் பணியாளர்கள் கூறுகின்றனர்.

சடலங்கள் பாலைவன ஓநாய்களால் குதறப்பட்டு, அழுகி உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக மீட்புப் பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை இவ்வாறு பாலைவனத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நம்பப்படுகிறது.

நைஜரின் ஆர்லிட் நகரிலிருந்து செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் தொடக்கத்தில் இவர்கள் புறப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சஹாரா பாலைவனத்துக்கு கீழே உள்ள ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் குடிபெயரும் குடியேறிகளின் பிரதான பாதையில் நைஜர் உள்ளது.

இந்தப் பாலைவனத்தைக் கடந்துசெல்ல நினைப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமது இலக்கை எட்ட முடியாமல், இடைநடுவில் வடக்கு ஆபிரிக்க நாடுகளிலேயேதொழில்செய்யும் நிலைக்கு வந்துவிடுவார்கள்.

இந்தச் செய்தி குறித்து மேலும்