புயல் வியட்நாமில் கரை கடந்துள்ளது

பிலிப்பைன்ஸில் பெரும் அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கானோரை பலி கொண்ட பெரும் புயல், வியட்நாமின் வட மாகாணமான, குவாங் நின்னில் , கரை கடந்துள்ளது.

வியட்நாமை அடையுமுன், பலவீனமடைந்து, கடுமையான் வெப்பமண்டல புயலாக உருவெடுத்த இந்த ஹையான் சூறாவளி, இருப்பினும், மணிக்கு 150 கிமீ வேகத்தில் கரையைத் தாக்கியது.

தலைநகர் ஹனாயில் பலத்த மழை பெய்யும், வெள்ளம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே 6 பேர் இறந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன