மாலத்தீவு அதிபர் தேர்தல்: இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு இன்று

Image caption அப்துல்லா யாமீனுக்கும் (இடது பக்கத்தில் இருப்பவர்) முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட்டுக்கும் இடையே போட்டி

மாலத்தீவில் பல தடவைகள் தாமதமடைந்து வந்துள்ள அதிபர் தேர்தலின் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் மக்கள் வாக்களிக்கின்றனர்.

புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இதற்கு முன்னர் மூன்று தடவைகள் எடுக்கப்பட்ட முயற்சிகள் நாட்டின் உச்சநீதிமன்றத்தால் ஒன்றில் செல்லப்படியற்றதாக்கப்பட்டுள்ளன. அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

எதிர்கட்சித் தலைவர் மொஹமட் நஷீட் இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் முன்னணியில் இருக்கிறார்.

அவர் தான் மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராக மொஹமட் நஷீட் 2008-இல் பதவியேற்றார்.

எதிர்ப்பாளர்களினதும் எதிர்ப்பு-போலிஸ் அதிகாரிகளினதும் அழுத்தங்கள் காரணமாக அவர் கடந்த ஆண்டில் பதவி விலகினார்.

மாலத்தீவினை சுமார் மூன்று தசாப்தங்களாக ஆண்ட மவ்மூன் அப்துல் கயூமின் சகோதரரான அப்துல்லா யமீன், இந்த இரண்டாம் சுற்று வாக்குப்பதிவில் நஷீட்டுக்கு போட்டியாக உள்ளார்.