எகிப்து ரெயில் விபத்தில் 26 பேர் பலி

Image caption எகிப்து ரெயில்-பஸ்-ட்ரக் மோதல்

எகிப்தின் தலைநகரான கெய்ரோவின் தெற்கே, ரெயில்வே லெவல் கிராஸிங்கில், நடந்த விபத்தில் குறைந்தது 26 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த லெவல் கிராஸிங்கை, மினி பஸ் மற்றும் ஒரு ட்ரக், ஆகியவை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியபோது இந்த விபத்து நடந்தது.

டாஷுர் என்ற கிராமத்திற்கு அருகே நடந்த இந்த விபத்தில் 28 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.

காயமடைந்து இறந்தவர்களில் பெரும்பாலானோர் ஒரே பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒரு திருமணத்திலிருந்து மினி பஸ்ஸில் திரும்பி வரும் போது இந்த விபத்து நடந்துள்ளது என்றும் அப்பகுதி போலிசார் தெரிவித்துள்ளனர்.

எகிப்தின் அரச ரயில் சேவைகள் பாதுகாப்பாக செயல்படும் விஷயத்தில் , அவைகளின் செயல்பாடு மோசமாகவே இருந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ராணுவத்தில் புதிதாக ஆளெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு சென்ற ரயில் தடம் புரண்டதில் 19 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

மேலும் கடந்த வருடம், ரயில் வரும் சிக்னல் காண்பிக்கும் பொறுப்பிலிருந்தவர் தூங்கிவிட்டதால், பள்ளிக்கூட பேருந்து ஒன்றின் மீது ஓடும் ரெயில் மோதி சுமார் 50 குழந்தைகள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது