பிரிட்டன் சிறுபான்மை ஊழல் கருத்து : சட்ட மா அதிபர் மன்னிப்புக் கோரினார்

டொமின்க் கிறீவ்
Image caption டொமின்க் கிறீவ்

பிரிட்டனில் உள்ள சில சிறுபான்மைச் சமூகங்களில் - குறிப்பாக பாகிஸ்தானிய சமூகத்தில் ஊழல் இருப்பதாகக் கூறியது தொடர்பில் எழுந்த விமர்சனங்களை அடுத்து பிரிட்டனின் அரசாங்க தலைமை சட்ட ஆலோசகரான சட்டமா அதிபர் டொமின்க் கிறீவ் அவர்கள் மன்னிப்புக் கோரியுள்ளார்.

சில நாடுகளில் இருந்துவரும் குடியேறிகள், அங்கு ஒரு தரப்புக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கும் ஒருவகையான கலாச்சாரத்தை நம்பும் வகையில் வளர்ந்திருப்பதாக டெய்லி டெலிகிராப் சஞ்சிகைக்கு அவர் சனிக்கிழமையன்று கூறியிருந்தார்.

இந்தக் கருத்து மனதைப் புண்படுத்துவது என்றும், சமூகங்களை பிரிக்கும் வகையிலானது என்றும் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதியான சஜிட் கரிம் கூறியுள்ளார்.

பாகிஸ்தானிய சமூகத்தில் ஒரு பிரத்தியேகமான பிரச்சினை இருப்பதாகத் தான் நினைக்கவில்லை என்று கிறீவ் இப்போது கூறியுள்ளார்.

எவரையும் தனது கருத்து புண் படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்