'சிரியா போரில் 11, 000 சிறார்கள் பலி'

சிரியா சிறார்கள்
Image caption சிரியா சிறார்கள்

சிரியா போரில் பதினோராயிரத்துக்கும் அதிகமான சிறார்கள் கொல்லப்பட்டதாக புதிதாக வெளியான ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகின்றது.

இதில் குறைந்தது ஆயிரம் பேராவது சினைப்பர்களினால் வேண்டுமென்றே இலக்கு வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள், (அவர்களில் பலர் ஒரு வயதுக்கு குறைவானவர்கள்) சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பிபிசிக்கு வழங்கப்பட்ட ஆக்ஸ்போர்ட் ஆய்வுக்குழுவின் அறிக்கை கூறுகின்றது.

ஆயினும் இப்படியாக இறந்தவர்களில் பெரும்பாலானோர் தமது இருப்பிடங்களில் ஆர்ட்டிலறி குண்டுகள் விழுந்து வெடித்ததால் உயிரிழந்திருக்கிறார்கள்.

சிரியாவில் சிறார்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு அனைத்துத் தரப்பையும் கோரியுள்ள இந்த அறிக்கை, இப்படியான அக்கிரமங்களில் ஈடுபடுபவர்கள் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை வரவேண்டும் என்று கோரியுள்ளது.