எகிப்து பெண் போராட்டக்காரர்களுக்குச் சிறை தண்டனைக்கு கண்டனம்

Image caption எகிப்தில் போராட்டம் நடத்திய பெண்களுக்கு சிறை

எகிப்தில் இஸ்லாமியவாதப் பெண் போராட்டக்காரர்களுக்கு 11 ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு மனித உரிமைகள் குழுக்கள் விமர்சித்துள்ளன.

எகிப்தில் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அதிபர் மொஹமத் மோர்ஸிக்கு ஆதரவாக அலெக்ஸாண்டிரியாவில் நடத்தப்பட்ட போரட்டத்தில் பதின்பருவப் பெண்கள் உட்பட 21 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

நாசம் விளைவித்தல், பலப்பிரயோகம் போன்ற குற்றங்களின் கீழ் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் அமைதியான போராட்டம் நடத்தியதாக அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வகையான தண்டனைகள், எகிப்தில் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தன்மைக்கு மேலும் ஆதாரமாகப் பார்க்கப்படுவதாக கெய்ரோவிலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

கைது செய்யப்பட்ட ஒரு 15 வயது பெண் தன் பள்ளிக்கு செல்லும் வழியில், அந்த போராட்டம் நடந்த இடத்தைக் கடந்து சென்றதாக அப்பெண்ணின் குடும்பம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது.