வங்கதேசம்: ஆடைத் தொழிற்சாலைத் தீயிற்கு நாசகார வேலையே காரணம்?

Image caption 10 மாடிக் கட்டடம் முழுவதும் தீ பரவிவிட்டதாக தகவல்

வங்கதேசத்தில் மிகப்பெரிய ஆடைத் தொழிற்சாலைகளில் ஒன்றின் மீது சில நபர்களினாலேயே தீ வைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள சந்தேகத்தை அடுத்து விசாரணைகள் நடந்துவருகின்றன.

முக்கிய மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளைத் தைக்கும் பெரிய தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த தீ பரவியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சேதங்கள் பற்றிய உடனடித் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தலைநகர் டாக்கா அருகே அமைந்துள்ள இந்த 10 மாடிக் கட்டடம் முழுவதும் தீ பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பள உயர்வுகோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமது சக ஊழியர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து, தொழிலாளர்களே கோபாவேசத்துடன் தாக்குதல்களில் ஈடுபட்டிருந்ததாக காவல்துறையினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

தைத்த ஆடைகள் ஏற்றுமதியில் வங்கதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஆனால், அங்கு அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ள பல சம்பவங்கள் தொழிலாளர்களின் தொழிற்தள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.