சவுதி : பெண்களுக்கு ஓட்டுனர் அனுமதி கோரிய செயற்பாட்டாளர் தடுக்கப்பட்டார்

சவுதி பெண் ஓட்டுனர்கள்
Image caption சவுதி பெண் ஓட்டுனர்கள்

சவுதியில் பெண்களுக்கு வாகனங்களை ஓட்ட அனுமதி கோரி போராட்டங்களை முன்னெடுத்துவந்த முன்னணிச் செயற்பாட்டாளர், தலைநகர் ரியாத்தின் ஊடாக தனது காரை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளார்.

தான் உள்ளூர் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக பிபிசியிடம் அவர் கூறினார்.

இரு தினங்களுக்கு முன்னர்தான் சவுதி உள்துறை அமைச்சரைச் சந்தித்த இரு செயற்பாட்டாளர்கள், இந்தத் தடை குறித்து சவுதி அரசாங்கம் தமது நிலையை மாற்ற ஆரம்பித்திருப்பதான ஒரு எதிர்பார்ப்பை, அந்தச் சந்திப்பு தமக்கு ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்திருந்தனர்.

கடந்த செப்டம்பரில் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் ஒரு போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில் இது நிகழ்ந்திருக்கிறது.