ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர் கார் விபத்தில் பலி

Image caption கார் விபத்தில் இறந்த பால் வாக்கர்

பிரபல ஹாலிவுட் திரைப்பட நடிகர் , பால் வாக்கர், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வடக்கே நடந்த ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்.

அவருக்கு வயது 40.

சட்டவிரோதமான வகையில் தெருக்களில் நடத்தப்படும் கார் பந்தயங்கள் பற்றிய தொடர்ச்சிப் படங்களான, " பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் (Fast and Furious) படங்களில் அவர் நடித்த பாத்திரங்களுக்காக அவர் புகழ் பெற்றிருந்தார்.

அவர் பயணியாகச் சென்று கொண்டிருந்த சிவப்பு நிற போர்ஷே கார் , ஒரு தெரு விளக்குக் கம்பத்தின் மீது மோதி, பின்னர் மரமொன்றின் மீதும் மோதிய பிறகு வெடித்துத் தீப்பிடித்ததில் அவர் இறந்தார்.

இந்த "பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்" தொடரின் ஏழாவது பகுதிப் படத்தில் அவர் தற்போது நடித்துக்கொண்டிருந்தார்.

அவர் பிற சண்டைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.