நெல்சன் மண்டேலா 1918-2013

Image caption கறுப்பின நாயகன், தென்னாப்ரிக்க விடுதலை வீரர், உலகத் தலைவர், நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கைக் குறிப்பு

1918 - கிழக்கு கேப்பில் பிறந்தார்

1943- ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் சேர்ந்தார்

1956- தேசத் துரோகக் குற்றச்சாட்டு அவருக்கு எதிராகப் பதியப்பட்டது, ஆனால் நான்காண்டு விசாரணைக்குப் பிறகு குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன

1962-கலவரத்தைத் தூண்டியது, பாஸ்போர்ட் இல்லாமல் நாட்டைவிட்டு வெளியேறியது ஆகிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்தாண்டு சிறைத் தண்டனை

1964- நாசவேலை குற்றச்சாட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறார்.

1990- சிறையிலிருந்து விடுதலை

1993-- அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது

1994- தென்னாப்ரிக்காவின் முதல் கறுப்பின அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

1999- தென்னாப்ரிக்காவின் அதிபர் பதவியிலிருந்து விலகுகிறார்.

2001- ப்ரொஸ்டேட் புற்று நோய் பீடிக்கிறது.

2004- பொது வாழ்விலிருந்து விலகுகிறார்.

2005- தனது மகன் எச்.ஐ.வி. எய்ட்ஸ் நோய் தொடர்பான உடல்நலக்குறைவால் இறந்ததாக அறிவிக்கிறார்.