மண்டேலா பிரார்த்தனைக் கூட்டம் தொடங்குகிறது, தலைவர்கள் வருகை

Image caption பிரார்த்தனை நிகழ்வு

இன்னும் சிறிது நேரத்தில் துவங்க இருக்கும் நெல்சன் மண்டேலா நினைவுப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொள்ள தென்னாப்ரிக்காவின் சொவெட்டோவில் இருக்கும் எப்.என்.பி விளையாட்டரங்கில் பல்லாயிரகணக்கான தென்னாப்பிரிக்கர்கள் குழுமி, ஆடிப்பாடிக்கொண்டிர்க்கிறார்கள்.

இந்த அரங்கில் இடம் பிடிக்க, பலர் நேற்றிரவிலிருந்தே மழையையும் பொருட்படுத்தாது, வெளியே முகாமிட்டிருந்தனர்.

இந்த நினைவுப் பிரார்த்தனை நிகழ்வில் கலந்துகொள்ள சர்வதேசத் தலைவர்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள்.

பிரார்த்தனை நிகழ்வு ஜோஹனஸ்பர்கில் இருக்கும் மற்ற மூன்று விளையாட்டரங்குகளில் குழுமியிருக்கும் மக்களுக்குக் காண்பிப்பதற்காக பிரம்மாண்டமான தொலைக்காட்சித் திரைகளில் காண்பிக்கப்படும்.

ஆனால் நெல்சன் மண்டேலாவின் உடலடங்கிய சவப்பெட்டி இந்த விளையாட்டரங்கில் வைக்கப்படாது.

அவரது உடல் அரச மரியாதைக்காக பிரிட்டோரியாவில் புதன்கிழமையன்று வைக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை இறுதிச்சடங்குகள் நடக்கும்வரை , பொது மக்கள் அஞ்சலிக்காக இருக்கும்.