சீன நிலவுக் கலனிலிருந்து ஆளில்லா வாகனம் ஓட ஆரம்பித்தது

Image caption நிலவின் மேற்பரப்பில் சீனாவின் ஆளில்லா வாகனம் ( வரையப்பட்ட சித்திரம்)

சீனாவின் ஜேட் ராபிட் உலாவி, நிலவின் மேற்பரப்பை ஆராய்வதற்காக, அதை நிலவில் இறக்கிய கலனிலிருந்து விலகி சென்றிருக்கிறது.

இந்தக் கலன் நிலவில் இறங்கிய சில மணி நேரங்களில் இது நடந்திருக்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த ஆளில்லா வாகனம் , இறக்கும் கலனால் திறந்துவிடப்பட்ட ஒரு சரியும் தகட்டின் மூலம் இறங்கி வானவில் குடா என்று அறியப்படும் எரிமலைச் சமவெளியை நோக்கி உருண்டோடியது.

அங்கு அது மூன்று மாதங்கள் வரை அறிவியல் தகவல்களைச் சேகரிப்பதுடன், கனிமங்கள் ஏதும் இருக்கின்றனவா என்பது பற்றியும் ஆராயும்.

இந்த முயற்சி, 40 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் நடத்திய நிலவுப் பயணங்களைப் போலவே தேசியத் திறனைக் காட்டும் ஒரு நடவடிக்கை, இது தேசியப் பெருமை உணர்வைத் தூண்டும் என்று பிபிசியின் பீஜிங் செய்தியாளர் கூறுகிறார்.