ஹிட்லருக்கு வழங்கப்பட்ட கௌரவக் குடியுரிமையை ரத்து செய்தது ஜெர்மன் நகர்

Image caption கௌரவக் குடியுரிமை ரத்து

அடாஃல்ப் ஹிட்லருக்கு அளிக்கப்பட்டிருந்த கௌரவ குடியுரிமையை, தெற்கு ஜெர்மனியிலுள்ள ஒரு சிறிய நகரம் விலக்கிக் கொண்டுள்ளது.

அந்த நடவடிக்கையை எடுக்க அங்குள்ள கவுன்சில் முன்னர் மறுத்திருந்தாலும், இப்போது பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக

ஹிட்லரின் கௌரவ குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கையை இப்போது டியட்ராம்செல் நகரம் எடுத்துள்ளது.

ஹிட்லருக்கும் அவரை அரச தலைவராக நியமித்த பால் வான் ஹைண்டன்பர்க் ஆகிய இருவருக்கும் எண்பது ஆண்டுகளுக்கு முன்னர் கௌரவக் குடியுரிமையை அந்த நகரம் வழங்கி கௌரவித்திருந்ததை ஆவண ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

எனினும் அதை ரத்து செய்ய கடந்த வாரம் உள்ளூர் கவுன்சிலின் உறுப்பினர்கள் மறுத்துவிட்டனர். சரித்திரத்தை மாற்றி எழுதும் வேலை தங்களுக்கு இல்லை என்று அவர்கள் கூறினர்.

இதையடுத்து கூட்டப்பட்ட இரண்டாவது சிறப்புக் கூட்டத்தில் அந்த நகரசபை உறுப்பினர்கள் தங்களது முந்தைய முடிவுக்கு மன்னிப்பு கோரியது மட்டுமல்லாமல், இந்த இருவரின் குடியுரிமையை பறிக்கும் நடவடிக்கைக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவித்தனர்.