தென் துருவத்திற்கு பனிச்சறுக்கிப் பயணம் -லண்டன் இளைஞர் சாதனை

அண்டார்டிக்கா கடற்கரையிலிருந்து தென் துருவத்திற்கு வேகமாகப் பயணித்துச் சென்று புதிய சாதனையை படைத்துள்ளார் லண்டனை சேர்ந்த ஒரு பதின்பருவ இளைஞர்.
தென் துருவத்திற்கு இதுவரை பனிச்சறுக்கி சென்றவர்களில் மிகவும் இளையவர் இவர்தான்.
இந்த சுமார் 500 கிலோமீட்டர் உள்ள தூரத்தை வெறும் 18 நாட்களில் பயணித்து முடித்தார் 19 வயதான பார்க்கர் லியோடோ.
உறைநிலைக்குக் கீழ் (மைனஸ்) ஐம்பது டிகிரி வெப்பநிலை உள்ள சூழலில், 'டிரான்ஸ்-அண்டார்க்டிக்' மலைத்தொடரை லியோடோவும் அவரது பயண அணியும் 80 கிலோவிற்கும் அதிகமான எடையுள்ள சக்கரமில்லாத பனிச் சறுக்கு வண்டிகளை இழுத்துக் கடந்து சென்றனர்.
காலநிலை மாற்றம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சிக்காக பனி மாதிரிகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர்.