"தாய்லாந்தில் அரசியல் கட்டமைப்பை மாற்ற புதிய குழு"

Image caption யிங்லுக் ஷிண்வத்

தாய்லாந்தில் கடும் எதிர்ப்புகளை சந்தித்துவரும் பிரதமர் யிங்லுக் ஷிணவத், நாட்டின் அரசியல் கட்டமைப்பை மாற்றியமைக்கும் வகையில் சில வழிமுறைகளை முன்வைக்க சுயாதீன சீர்திருத்தக் குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளார்.

இந்தப் புதிய குழு அடுத்த சில வாரங்களில் அமைக்கப்படும் என தாய் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது அவர் தெரிவித்தார்.

அந்தக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் எனவும் அந்தத் தொலைக்காட்சி உரையின்போது அவர் உறுதியளித்தார்.

Image caption தாய்லாந்தில் பல வாரங்கள் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் பல வாரங்களாக நடைபெற்ற பிறகு பிரதமரின் இந்த அறிவிப்பு வந்தாலும், எதிர்க்கட்சி போராட்டக்காரர்கள் இந்தப் பிரேரணையை உடனடியாக புறந்தள்ளியுள்ளனர்.

தாமாகவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் பிரதமர் தக்ஷின் ஷிண்வத்தின் பினாமியாகவே அவரது சகோதரியும் தற்போதையப் பிரதமருமான யிங்லுக் செயல்படுகிறார் என்று அவரது எதிர்ப்பாளர்கள் வாதிடுகிறார்கள்.