தெற்கு ரஷ்யா: ரயில் நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்

Image caption கடந்த அக்டோபரிலும் இதே பகுதியில் பஸ்ஸொன்றின் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது

ரஷ்யாவின் தென்னகரமான வோல்கோகிராட்டில் ரயில் நிலையமொன்றில் நடந்துள்ள தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவர் நடத்திய இந்தத் தாக்குதலில் 50 பேர்வரையில் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்யாவின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு கூறுகின்றது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தத் தரப்பினரும் இன்னும் உரிமை கோரவில்லை.

உள்ளூர் நேரப்படி 12.45 மணியளவில் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த அக்டோபரிலும் பேருந்தொன்றில் பெண் தற்கொலை குண்டுதாரி என்று சந்தேகிக்கப்படுபவரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

ஸோச்சி நகரில் இன்னும் 6 வாரங்களில் நடக்கவுள்ள 2014-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா நடக்கவுள்ள நிலையில், அங்கு ஆயுதக்குழுக்கள் வன்முறைத் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்று அரச மட்டத்தில் கவலைகள் உள்ளன.

வடக்கு கோக்காசஸ் பிராந்தியத்தில் இயங்கும் கிளர்ச்சிப் படையினர் அண்மைய ஆண்டுகளாக ரஷ்யாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்திவருகின்றனர்.