சீன மசூதி நெரிசலில் 14 பேர் மரணம்

Image caption மசூதி விபத்தில் 14 பேர் பலி ( சீன முஸ்லீம்கள் , பழைய படம்)

சீனாவின் வடமேற்குப் பகுதியில் மசூதி ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 14 பேர் இறந்துள்ளதாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.

மறைந்த ஒரு மதத்தலைவரின் நினைவுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்களுக்கு இத்தகைய நிகழ்வுகளின்போது வழக்கமாகத் தரப்படும் உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அரச ஊடகங்கள் கூறின.

நின்ஷியா பிரதேசத்தின் கையுயான் நகரின் மேற்குப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருகிறது.

இந்தப் பிரதேசத்தில் வசிக்கும் ஹுய் இனக்குழுவினர், சீனாவில் வாழும் பல முஸ்லீம் சிறுபான்மைக் குழுவினரில் ஒருவர்.