ஆப்கான் தாக்குதலில் 21 பேர் பலி

ஆப்கான் தாக்குதலில் 21 பேர் பலி படத்தின் காப்புரிமை
Image caption ஆப்கான் தாக்குதலில் 21 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபூலில் உணவு விடுதி ஒன்றில், நடந்த தாக்குதலில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த மேலும் விபரங்கள் வந்துள்ளன.

தாக்குதலாளி விடுதியின் வாயிலில் தனது குண்டை வெடிக்கச் செய்ததுடன், அதனை அடுத்து இரு துப்பாக்கிதாரிகளும் சுட்டு இருக்கிறார்கள்.

தனது துப்பாக்கியை எடுக்க முயன்ற அந்தக் கடையின் லெபனானிய உரிமையாளரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்.

முன்னைய தாக்குதல் ஒன்றை அடுத்து அங்கு அவர் மேலதிக பாதுகாப்பு போட்டிருந்தார்.

உள்ளூர் அதிகாரிகள் பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும், புலன்விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் ஆப்கான் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

பர்வான் மாகாணத்தில் கடந்த வாரம் நடந்த அமெரிக்க வான் தாக்குதலுக்கான பதிலடியாக தாம் இந்த தாக்குதலை நடத்தியதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.