சிரியா பேச்சுவார்த்தை : ஒரே அறையில் இருதரப்பும்

லக்தர் பிரஹமி படத்தின் காப்புரிமை AFP
Image caption லக்தர் பிரஹமி

ஜெனிவாவில் நடக்கும் சிரியா சமாதானப் பேச்சுக்களில் போரில் ஈடுபடும் இரு தரப்பும் முதல் தடவையாக ஒரே அறையில் சிறிது நேரம் நேருக்கு நேர் அமர்ந்திருக்கிறார்கள்.

ஆனாலும் அவர்கள் நேரடியாக ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

இந்த முதல் கூட்டம் சுமார் அரை மணிநேரம் நடந்ததாக செய்திகள் கூறுகின்றன.

இதற்கு முன்னதாக இரு தரப்பும் தாம் ஐநாவின் மத்தியஸ்தரான லக்தர் பிரஹமி அவர்களுடன் மாத்திரந்தான் பேசுவோம் என்று கூறிவந்தன. தமது முக்கியமான கவனம் மனித நேய உதவிகள் மற்றும் கைதிகளை விடுதலை செய்தல் ஆகியவை குறித்தே இருக்கும் என்று ஐநாவுக்கான சிரியாவின் தூதுவர் பிபிசியிடம் கூறினார்.

அதிபர் அசாத்தின் எதிர்காலம் போன்ற முக்கிய விடயங்களை கையாள்வதற்கு முன்னதாக மத்தியஸ்தர்கள் இரு தரப்புக்கும் இடையே ஒரு பொதுத்தளத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சுவிட்ஸர்லாந்தில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.