மடகாஸ்கர்: மாடு திருடி மாண்ட மக்கள்

வரைபடத்தில் மடகாஸ்கர்
Image caption வரைபடத்தில் மடகாஸ்கர்

மடகாஸ்கரில் பொலிசாருக்கு கால்நடை திருடர்களுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கால்நடை திருடர்கள் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமை பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் ஜெபு(Zebu) வகை மாடுகள் நூற்றுக்கும் அதிகமானவற்றின் தலைகளைத் தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.

டஹலோஸ் (Dahalos) என்றழைக்கப்படும் இந்த கால்நடை திருடர்களுக்கு எதிரான தமது நடவடிக்கை தொடருவதாக பொலிசார் கூறுகின்றனர்.

மடகாஸ்கரில் கால்நடைத் திருட்டு என்பது வழமையாக நடந்துவரும் ஒரு விஷயம்.

2012ஆம் ஆண்டில் கால்நடை திருடச் சென்று நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதை அடுத்து, Dahalosசுக்கு எதிரான விசேட அதிரடிப்படை ஒன்றை அரசாங்கம் அமைத்திருந்தது.