நேபாளத்தின் பிரதமராக சுஷில் கொய்ராலா தேர்வு

  • 10 பிப்ரவரி 2014
புதிய பிரதமர் சுஷில் குமார்கொய்ராலா படத்தின் காப்புரிமை bbc
Image caption புதிய பிரதமர் சுஷில் குமார் கொய்ராலா

நேபாளத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவரான சுஷில் குமார் கொய்ராலா அந்நாட்டின் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

அங்கு தேர்தல்கள் நடைபெற்று மூன்று மாத காலம் இழுபறி இருந்தவந்த நிலையில் தற்போது அங்கு பிரதமர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் நேபாளி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சுஷில் குமார் கொய்ராலா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் வெற்றி பெற்றார்.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக பிரதமர் பதவிக்கான தேர்வு குறித்து மிக நீண்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் பெரிய கட்சியாக வந்து ஆட்சி அமைத்திருந்த மாவோயிஸ்டுகளால் நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தல்களில் மூன்றாவது இடத்தையே பெறமுடிந்தது.

75 வயதாகும் கொய்ராலா அடுத்த ஒராண்டுக்குள் புதிய அரசியல் சாசனத்தின் வரைவு ஒன்று தயாரிக்கப்படும் என்று உறுத்தியளித்துள்ளார்.