தாய் நாடு திரும்பினார் பசிபிக் கடலில் 13 மாதம் தனித்து விடப்பட்டு தப்பியவர்

படத்தின் காப்புரிமை AFP
Image caption மீண்டு வந்த ஜோசே ஆல்வரெங்கா

பசிபிக் பெருங்கடலில் 13 மாதங்கள் தனியே படகில் பயணித்து உயிர் தப்பி ஆஸ்திரேலியாவின் தீவொன்றில் கரையொதுங்கிய எல் சால்வடார் நாட்டுக்காரர் ஜோசே சால்வடார் ஆல்வரெங்கா மீண்டும் தாய்நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் மார்ஷல்ஸ் தீவுகளில் கரையொதுங்கிய ஜோசே ஆல்வரெங்கா அங்கிருந்து விமானம் மூலம் எல் சால்வடார் நாட்டுக்கு திரும்ப அனுப்பப்பட்டார். விமான நிலையத்தில் அவரை சந்தித்த செய்தியாளர்களுடன் அவரால் பேசக்கூட முடியவில்லை. தனது முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்ட அவர் , உணர்ச்சிவசப்பட்டு அழும் நிலைக்கு வந்துவிட்டார்.

விமானநிலையத்தில் அவரை வரவேற்க வந்திருந்த அவரது மகளால்கூட அவரை நினைவுகூர முடியவில்லை. ஏனென்றால் கடந்த 14 ஆண்டுகளாக அவர் மெக்ஸிகோவில் வசித்து வந்திருக்கிறார்.

பசிபிக் பெருங்கடலில் அவர் ஒரு சிறிய படகில் 13 மாதங்கள் தனித்து விடப்பட்ட நிலையிலும் தப்பிப் பிழைத்ததாக அவர் கூறும் கதையை பலர் நம்ப மறுத்தாலும், மெக்ஸிகோவிலிருந்து வரும் விவரங்கள் அவரது கூற்றை உறுதிப்படுத்துவது போல் தோன்றுகிறது.

இந்தச் செய்தி குறித்து மேலும்