ஆங்கிலிகன் மத போதகர்கள் ஒருபால் திருமணம் புரிய முடியாது

படத்தின் காப்புரிமை PA
Image caption யோர்க் மற்றும் கண்டர்பரி பேராயர்கள் தமது மதபோதகர்களுக்கான வழிகாட்டுதல் விதிகளில் கைச்சாத்திட்டனர்

இங்கிலாந்து திருச்சபையின் மத போதகர்கள் ஒருபால் திருமணம் புரிய இடமளிக்கப்பட மாட்டார்கள் என்று திருச்சபையின் உயர்பீட ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

அதேபோல், ஒருபால் உறவில் உள்ள மதபோதகர்கள் இந்த அறிவுறுத்தலை மீறினால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆங்கிலிகன் (Anglican) மதபோதகர்கள் சிவில் பாட்னர்ஷிப் எனப்படுகின்ற ஒருபால் உறவு வாழ்க்கையில் இருக்க திருச்சபை அனுமதி அளிக்கிறது.

ஆனால், அவர்கள் திருமணம் முடிக்காதவர்கள் என்ற புரிந்துணர்வில் தான் அந்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேநேரம், திருமணம் செய்துகொண்டுள்ள ஒருபால் உறவு தம்பதியரை ஆசிர்வதிக்கும் சிறப்பு பூஜைகளை நடத்தக் கூடாது என்றும் ஆயர்கள் தங்களின் வழிகாட்டுதல்களில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மதபோதகர்கள் விரும்பினால், ஒருபால் தம்பதியரை ஆசிர்வதிக்கும் சிறப்பு பூஜைகளை நடத்தலாம் என்று திருச்சபையின் அதிகாரபூர்வ அறிக்கையொன்று ஏற்கனவே கூறியிருக்கும் நிலையில் இந்தப் புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.

எனினும், தமது மதகுருமார் விரும்பினால் ஒருபால் தம்பதியருக்கு அதிகாரபூர்வமற்ற பிரார்த்தனைகளை நடத்தலாம் என்று ஆங்கிலிகன் ஆயர்கள் கூறியுள்ளனர்.