எத்தியோப்பிய விமானத்தைக் கடத்திய துணை விமானி சரண்

கடத்தப்பட்டு ஜெனீவாவில் தரையிறக்கப்பட்ட விமானம்
Image caption கடத்தப்பட்டு ஜெனீவாவில் தரையிறக்கப்பட்ட விமானம்

எத்தியோப்பியத் தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து இத்தாலியின் ரோம் நகரம் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றைக் கடத்தி அதனை ஜெனீவாவில் பலவந்தமாக தரையிறக்கியிருந்த அந்த விமானத்தின் துணை விமானி தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

விமானி ஓய்வெடுக்க சென்ற நேரத்தில் விமானத்தின் கட்டுப்பாட்டை இந்த துணை விமானி கையேற்று ஜெனீவாவுக்கு திருப்பினார் என்று சுவிஸ் பொலிசார் கூறூகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் தற்போது இவர் அரசியல் தஞ்சம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமானத்தின் ஜன்னல் ஒன்றிலிருந்து கையிறு தொங்கவிட்டு வெளியே வந்த இந்த துணை விமானி அதிகாரிகளிடம் சரணடைந்தார்.

விமானத்தில் இருந்த பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக இருந்தனர்.

இச்சம்பவம் நடந்த நேரத்தில் அந்த விமானத்தில் மொத்தம் சுமார் 200 பேர் இருந்துள்ளனர்.