காணொளி: யுக்ரெய்னில் அரசு எதிர்ப்பு போராட்டங்களில் குறைந்தது 17 பேர் பலி

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்த காணொளியில் ஒலி வர்ணனை இல்லை.

யுக்ரெய்ன் தலைநகர் கியெவ்வில் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே தற்போது நடந்த மோதல்களில் குறைந்தது 17 ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டிலிருந்து வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிபர் யானுகோவிச் மற்றும் அரசு எதிர்ப்பு அணியின் தலைவர்கள் இடையே பலவீனமான சமாதான ஒப்பந்தம் ஒன்று புதன் இரவு ஏற்பட்டிருந்தாலும் பொழுது விடிந்ததும் வன்முறை வெடித்திருந்தது.

பொலிசாருடன் மோதிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சுதந்திர சதுக்கத்தின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்துள்ளனர்.

இந்தச் சதுக்கத்தின் அருகிலுள்ள திடலில் சடலங்கள் கிடப்பதை உள்ளூர் தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன.

நாடாளுமன்றம் அமைச்சரவைக் கட்டிடங்கள் போன்றவற்றில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழையலாம் என்ற அச்சம் காரணமாக அக்கட்டிடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.