துபாய் தங்கம் இறக்குமதியாளர் விதிமீறல்

தங்கம் படத்தின் காப்புரிமை none
Image caption துபாயின் பிரதான தங்கம் இறக்குமதியாளர் விதிமீறல்

துபாயின் மாபெரும் தங்கம் சுத்திகரிக்கும் நிறுவனமான கலோட்டி, யுத்தம் நடக்கும் பகுதியில் கிடைக்கும் தங்கம் உலக சந்தைக்குள் உட்புகாமல் இருப்பதற்காக உருவாக்கப்பட்ட விதிகளை தீவிரமாக அத்துமீறி இருப்பதாக விஷயம் தெரிந்த உள் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கலோட்டி நிறுவனத்தில் தணிக்கையை மேற்கொண்ட எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவன குழு ஒன்றின் தலைவரான அம்ஜத் ரிஹான் என்பவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இவர்கள் மேற்கொண்ட சோதனையில் கலோட்டி நிறுவனம் முறையான சோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

கலோட்டி நிறுவனத்தில் கண்டறியப்பட்ட தகவலை துபாய் பல்பொருள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்த பின்னர், அந்த மையமோ, தணிக்கையில் கண்டறியப்பட்ட தீவிர தாக்கம் உடைய விஷயங்களை மறைக்கும் வகையில் அதனுடைய தணிக்கை முறைகளை மாற்றியமைத்து கொண்டதாக அம்ஜத் ரிஹான் கூறியுள்ளார். அதே போல எர்னஸ்ட் அண்ட் யங் நிறுவனமோ இவ்விஷயத்தில் கண்ணை மூடி கொண்டு விட்டதாகவும் அவர் கூறுகிறார்.

உலக தங்க சந்தையில் துபாய் மிக முக்கியமான மையமாக இருக்கின்றது, உலகில் நடக்கும் ஐந்தில் ஒரு பங்கு தங்க வர்த்தகம் துபாயில் நடைபெறுகிறது. தங்கமானது ஆபரணங்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்டுக்கு சுமார் 300 டன் தங்கம் மின்னணு பொருட்களை செய்யவும் பயன்படுகிறது.

யுத்தங்களுடன் தொடர்புடைய தங்கம் விற்பனை செய்வதற்கான மிக பெரிய மையமாக துபாய் இருக்கின்றது என குளோபல் விட்னஸ் தன்னார்வ அமைப்பு மற்றும் ஐ.நா வின் அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள துபாய் பல்பொருள் ஒழுங்குமுறை ஆணையம், எர்னஸ்ட் அண்ட் யங் மற்றும் கலோட்டி நிறுவனம் ஆகியவை தாங்கள் முறையாகவே செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.