பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது தாக்குதல்

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது தாக்குதல் படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழு மீது தாக்குதல்

பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் போலியோ தடுப்பு மருந்து பணியாளரின் வாகனத் தொடரணி ஒன்று தாக்குதலுக்கு உள்ளானது.

பழங்குடியின மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றின் ஊடாகச் சென்றுகொண்டிருந்தபோது குறைந்தபட்சம் 2 தெருவோரக் குண்டுகளாவது வாகனங்களைக் தாக்கின.

அந்தக் குழுவின் பாதுகாப்புக்கான பொலிஸார் 11 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

முஸ்லிம்களை மலடாக்குவதற்கான சதியில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, போலியோ தடுப்புக் குழுக்களை இஸ்லாமியக் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்கி வருகிறார்கள்.

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல், பாகிஸ்தானில், போலியோ தடுப்பு பணியாளர்கள் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.