தாலிபான்களின் சண்டை நிறுத்தத்திற்கு பாக் வரவேற்பு

தாலிபான்கள்
Image caption தாலிபான்கள் மீது தாக்குதல் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

பாகிஸ்தான் தாலிபான்களுக்கு எதிரான வான் தாக்குதல்களை இடை நிறுத்தப் போவதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் செளத்ரி நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்கு சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள போவதாக தாலிபான்கள் சனிக்கிழமையன்று அறிவித்து இருந்தமை முன்னேற்றமான நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

அதே சமயம் தாலிபான்கள் எவ்விதமான வன்முறையில் ஈடுப்பட்டாலும், அதற்கு பதிலடி கொடுக்கும் உரிமை பாகிஸ்தான் இராணுவத்திற்கு உள்ளது என்றும் அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் ஆயுததாரிகள் பதுங்கி இருக்கலாம் என்று சந்தேகப்படும்படியான இடங்கள் மீது பாகிஸ்தானின் ஆயுதம் தரித்த ஹெலிகாப்டர்கள் தாக்குதலை நடத்தின. இதில் ஐந்து கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.