பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்குதல் : 11 பேர் பலி

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்குதல் படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்குதல்

பாகிஸ்தானில், தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 11 பேராவது கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் காலையில் மக்கள் கூடத்தொடங்கிய வேளையில், நீதிமன்ற வளாகத்தில் உடைத்துகொண்டு நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கு தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தற்கொலைக் குண்டுகளும் அங்கு வெடித்துள்ளன.

இறந்தவர்களில் ஒரு நீதிபதியும் பல சட்டத்தரணிகளும் அடங்குவதாகவும், மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கடந்த பல வருடங்களில் தலைநகரில் நடந்த மிகவும் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றான இந்தத் தாக்குதலுக்கு எவரும் இதுவரை உரிமை கோரவில்லை.

அரசாங்கத்துடன் மோதல் ஒப்பந்தம் ஒன்றுக்கு தலிபான்கள் வந்ததையடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான விமானத் தாக்குதல்களை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.