சிறார் துஷ்பிரயோகம்: 'வத்திக்கான் பொறுப்புடன் செயற்பட்டது'

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாப்பரசர் பிரான்சிஸ்

பாதிரிமாரின் சிறார் பாலியல் துஷ்பிரயோக விவகாரங்களை கத்தோலிக்கத் திருச்சபை கையாண்ட விதம் குறித்த குறிப்புகளை பாப்பரசர் பிரான்சிஸ் கடுமையாக ஆதரித்துப் பேசியுள்ளார்.

இத்தாலிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த, மிக அரிதான செவ்வி ஒன்றில் பாப்பரசர், சிறார் பாலியல் துஷ்பிரயோகத்தை வேரறுப்பதில் திருச்சபை முன்னின்று செயற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் திருச்சபை செயற்பட்டுள்ளதாகவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.

எனினும், திருச்சபை மீது மட்டுமே இந்தளவு விமர்சனத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறார் பாலியல் துஷ்பிரயோகங்களை ஒழித்துக் கட்டுவதற்கு வத்திக்கான் உருப்படியான நடவடிக்கையை எடுக்கவில்லை என்று ஐநா கடந்த மாதம் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.

சிறார் துஷ்பிரயோகங்களை திட்டமிட்டு மறைக்கும் வேலைகளுக்கு திருச்சபை இடமளித்திருப்பதாகவும் அந்த விமர்சனத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.