யுக்ரெய்னிய பிரச்சினைக்கு ஒபாமாவின் சிபாரிசுகள்

யுக்ரெய்னிய பிரச்சினைக்கு ஒபாமாவின் சிபாரிசுகள் படத்தின் காப்புரிமை AFP
Image caption யுக்ரெய்னிய பிரச்சினைக்கு ஒபாமாவின் சிபாரிசுகள்

யுக்ரெய்னில் நெருக்கடியை தளர்த்தும் வகையில், சர்வதேச கண்காணிப்பாளர்களை அங்கு நிறுத்துவது மற்றும் ரஷ்யாவுக்கும் யுக்ரெய்னின் புதிய அரசாங்கத்துக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்துவது ஆகியவை உள்ளடங்கலான சிபாரிசுகளை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

ஜேர்மனிய ஆட்சித் தலைவியான ஏங்கிலா மேர்க்கல் அவர்களுடனான தொலைபேசி உரையாடலின் போது இந்த திட்டங்களை ஒபாமா அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.

பிரான்ஸில் இன்று பிற்பகலில் அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஜான் கெர்ரியும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவும் கலந்துகொள்ளும் சந்திப்பு ஒன்றின் போது இந்த சிபாரிசுகள் கவனத்தில் எடுக்கப்படும்.

கண்காணிப்பாளர்கள் க்ரைமியாவில் உள்ள ரஷ்ய இனத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்க, அதற்குப் பதிலாக ரஷ்ய தனது படைகளை தளங்களுக்குப் பின்வாங்கிக்கொள்ளும்.