யேமென் அருகே அகதிகள் படகு மூழ்கி 40 பேர் பலி

அகதிப் படகு ஒன்று படத்தின் காப்புரிமை Reuters
Image caption அகதிப் படகு ஒன்று

யேமெனிற்கு தெற்கு கரையோரத்தை ஒட்டிய கடல் பரப்பில் ஆப்பிரிக்க குடியேற்றக்காரர்களைச் சுமந்து வந்த படகு ஒன்று கவிழ்ந்ததில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

மூழ்கிய இந்தப் படகில் இருந்து குறைந்தது முப்பது பேரை யேமெனிய கடற்படை ரோந்துக் கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

சொமாலியாவிலிருந்தும் எத்தியோப்பியாவிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான அகதிகள் ஏடன் வளைகுடாவைத் தாண்டி வர முயல்கிறார்கள் என்று குடியேறிகளுக்கான சர்வதேச உதவி அமைப்பு ஐ ஓ எம் கூறுகிறது.