மலேசிய விமான மர்மம் தொடர்கிறது

காணாமல் போன விமான பயணிகளின் உறவினர்கள் படத்தின் காப்புரிமை AP
Image caption காணாமல் போன விமான பயணிகளின் உறவினர்கள்

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போய் 5 நாட்கள் ஆகிய பின்னரும்கூட அதனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேடுதல் குழுக்கள் மலே வளைகுடாவின் இரு பக்கத்திலும், அவற்றின் தேடுதல் பரப்பை அதிகரித்துள்ளன.

வியட்நாமுக்கு தென்கிழக்கே 300 கிலோமீட்டர்கள் தொலைவில் வானில் ஒரு எரியும் பொருளை தான் பார்த்ததாக பெட்ரோல் அகழ்வுப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்ட வியட்நாமிய விமானங்களால் எதனையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்குகுக்கு சென்று கொண்டிருந்த தனது பாதையில் இருந்து அந்த விமானம் திரும்பி வர முயற்சித்ததா என்பதை உறுதி செய்ய முடியாது இருக்கும் நிலையில், மலே வளைகுடாவின் மேற்குப் பகுதிக்கு தமது தேடுதல் முயற்சிகளை மாற்றி உள்ளதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.