நியுயார்க் கட்டிட வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

படத்தின் காப்புரிமை Getty
Image caption பலியானோர் எண்ணிக்கை நான்காக உயர்வு

நியுயார்க் நகரில் இரண்டு அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வெடிப்பில் விழுந்ததில் இறந்தோர் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த வெடிப்பு எரிவாயு கசிந்ததால் ஏற்பட்டது என்று நியுயார்க் நகர மேயர் பில் டெ ப்லேசியோ கூறினார்.

இன்னும் ஒன்பது பேரைக் காணவில்லை, சுமார் 2 டஜனுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர்.

வெடிப்பு நடந்தபோது பூகம்பம் போன்ற ஒரு சத்தம் கேட்டதாக அண்டைப்பகுதிகளில் வசிப்பவர்கள் கூறினர்.

சுமார் 250 தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.