மலேசிய விமானத்தின் "பாகங்களை" தேடும் முயற்சியில் இது வரை வெற்றி இல்லை

படத்தின் காப்புரிமை
Image caption மலேசிய விமானத்தின் துகள்களாக இருக்கலாம் என்று கருதப்படும் பொருட்கள் காணப்பட்ட இடத்தைக் காட்டும் படம்

இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில், காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கருதப்பட்ட பொருட்களைத் தேடும் முயற்சியில் இது வரை வெற்றி கிடைக்கவில்லை.

இந்த துகள்களைத் தேடும் பணியில் விமானங்களும் கப்பல்களும் ஈடுபட்டிருக்கின்றன.

ஆனால் கடுமையான காற்றும், மழையும் இன்று இந்த முயற்சியைப் பாதித்தன.

நாளை வெள்ளிக்கிழமையும் இந்த தேடுதல் முயற்சி தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா வெளியிட்ட செய்கோள் மூலம் கிடைத்த இரண்டு படங்களில் உடைந்த பாகங்கள் போன்ற இரண்டு பொருட்கள் காணக்கூடியதாக இருந்தது. அதில் ஒன்று 24 மீட்டர் நீளமானதாக இருந்தது.

இது ஒரு புதிய, நம்பத்தகுந்த தகவல் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

ஆனால் மலேசியா, இந்த துண்டுகள் காணாமல் போன விமானத்தின் துகள்களாக இல்லாமல் இருக்கலாம் என்று எச்சரித்திருந்தது. இந்தப் பொருட்கள் தென் மேற்கு ஆஸ்திரேலிய நகரான பெர்த்திலிருந்து சுமார் 2,500 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தச் செய்தி குறித்து மேலும்