பூனை மயிலைத் தின்றதால் வேலையை இழந்த போலிஸ்காரர்

பாகிஸ்தான் பிரதமரின் பண்ணை வீட்டை காவல் காத்து கொண்டிருந்த மூன்று பொலிஸார் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரதமர் வளர்த்து வந்த மயில்களில் ஒன்றை பூனை அடித்து தின்று விட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முற்றத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் மயில்களில், ஒரு மயில் இறந்து கிடந்ததை தோட்டக்காரர் பார்த்துள்ளார்.
பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்காரர்களில் ஒருவர், பூனை மயிலை அடித்து கொன்று விடும் என்று தான் எதிர்ப்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அத்தோடு இந்த சம்பவம் தொடர்பாக 20 க்கும் மேற்பட்ட பொலிஸ்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் முற்றத்தை காவல் காக்காத பொலிஸ்காரர்கள் விடுவிக்கப்பட்டனர் என்றும் அவர் மேலும் கூறினார்.