பெண்களின் பிறப்பு உறுப்பை சிதைத்ததற்கான வழக்கு

  • 21 மார்ச் 2014
பெண்களின் பிறப்பு உறுப்பை சிதைத்ததற்கான வழக்கு
Image caption பெண்களின் பிறப்பு உறுப்பை சிதைத்ததற்கான வழக்கு

பெண்களின் பிறப்பு உறுப்பு சிதைக்கப்படும் குற்றத்துக்கான முதலாவது வழக்கு இப்போது தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

லண்டன் மருத்துவமனை ஒன்றில் குழந்தை ஒன்றை பிரசவித்த பெண்ணின் மீது இந்த பிறப்பு உறுப்பு சிதைப்புக்கான மருத்துவ நடவடிக்கை மேற்கொண்டதாக, மருத்துவர் தனுசன் தர்மசேன மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிதைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அவருக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஹசன் மொஹமட் என்ற இன்னுமொருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் பிறப்பு உறுப்பை சிதைத்தல் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான தடை 1985 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. ஆனாலும், இது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட முதலாவது சந்தேக நபர்கள் இவர்கள்தான்.

பிரிட்டனின் அயல்நாடான பிரான்ஸில் இப்படியான் நூற்றுக்கணக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு பலருக்கு வெற்றிகரமாகத் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், பிரிட்டன் மற்ற நாடுகளைவிட இந்த விடயத்தில் மந்த கதியிலேயே நடந்துகொண்டிருக்கிறது.

பெண்களின் சிறப்பு உறுப்பை சிதைக்கும் வழக்கம் ஆப்பிரிக்க சமூகங்கள் மத்தியில் காணப்படுகின்றது.