தென்னாப்ரிக்காவில் ஆணுறை பயன்பாடு குறைந்துள்ளது

படத்தின் காப்புரிமை AFP
Image caption மாணவர்கள் மத்தியில் ஆணுறை பாவனையை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை

தென்னாபிரிக்காவில் எய்ட்ஸ் மற்றும் ஹெச்ஐவி தொற்றின் அளவு உச்சத்திலேயே உள்ள போதிலும் அங்கு ஆணுறை பயன்பாடு குறைந்துவருவதாக ஆய்வுக் கணிப்பொன்று கூறுகிறது.

பலருடன் பாலியல் உறவு வைத்திருக்கின்ற, 50 வயதுக்கு உட்பட்ட தென்னாபிரிக்கர்கள் ஆணுறைகளை குறைந்தளவே பயன்படுத்துவதாக மனித விஞ்ஞான ஆய்வு கவுன்சில் கூறுகின்றது.

ஆய்வுக் கணிப்பில் பங்கெடுத்தவர்களில் முக்கால்வாசிப் பேர் தமக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று நம்புவதாகவும், அப்படி திருப்திப் பட்டுக்கொள்வது அபாயகரமானது என்றும் அந்த ஆய்வுக் கவுன்சில் சுட்டிக்காட்டியுள்ளது.

மாணவர்கள் மத்தியில் ஆணுறை பாவனையை ஊக்குவிப்பதற்காக பல வர்ண, பல சுவை கொண்ட விதவிதமான ஆணுறைகளை இலவசமாக விநியோகிக்கவுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு கூறுகின்றது.