பாகிஸ்தானில் கிறிஸ்துவ தம்பதிக்கு மரண தண்டனை

பாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் சிறுபான்மையாக உள்ளனர் படத்தின் காப்புரிமை Getty
Image caption பாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் சிறுபான்மையாக உள்ளனர்

பாகிஸ்தானில் முகமது நபி அவர்களை தூற்றும் வகையில் குறுந்தகவல் அனுப்பியதாக குற்றம் சுமத்தி கிறிஸ்துவ தம்பதி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஷாக்குஃப்தா கவுசர் மற்றும் அவரது கணவர் ஷஃப்குவாத் எமானுவல் ஆகிய இருவர் பஞ்சாபில் இருக்கும் முஸ்லிம் முக்கியஸ்தர்களுக்கு இந்த தகவலை அனுப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

திடமான ஆதாரம் எதுவும் இல்லாமலேயே, இஸ்லாமியவாதிகளால் அச்சப்பட்ட நீதிபதி இந்த தீர்ப்பை கொடுத்துள்ளதாக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

அரச வக்கீல்கள், குரான் வாசகங்களை உச்சரித்தப்படி மத நிந்தனை செய்பவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கும்படி கூறியுள்ளனர்.

அத்தோடு பாகிஸ்தானின் மத நிந்தனை தொடர்பான சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று முயற்சித்த பஞ்சாப் முன்னாள் ஆளுநர் சல்மான் டசீரை கொன்றவரையும் அரச வக்கீல்கள் போற்றி பேசியுள்ளனர்.