கருத்தடைச் சட்டம்: திருச்சபை எதிர்ப்பை மீறி உச்சநீதிமன்றம் ஒப்புதல்

படத்தின் காப்புரிமை AFP
Image caption பிலிப்பைன்ஸில், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை காட்டுகிறார் ஒரு சுகாதாரப் பணியாளர். ( ஆவணப்படம்)

பிலிப்பைன்ஸில் கத்தோலிக்கத் திருச்சபை, பத்தாண்டுகளுக்கும் மேலான காலம் எதிர்த்து போராடி வந்த, குடும்பக் கட்டுப்பாடு சட்டம் ஒன்றுக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றம் சரியானது என்று ஒப்புதல் அளித்திருக்கிறது.

இலவசமாக ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை அரசு சுகாதார நிலையங்கள் வழங்கவேண்டும் என்று இந்த புதிய சட்டம் கூறுகிறது.

இந்த சட்டம், சில நுட்பமான விஷயங்களைத் தவிர, பொதுவாக அரசியல் சட்டரீதியாகச் செல்லுபடியாகக் கூடியதுதான் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

திருச்சபையின் மேல் முறையீடுகள் காரணமாக, இந்த சட்டத்தை அமல்படுத்துவது ஏறக்குறைய ஓராண்டு காலமாக ஒத்திப்போடப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாடு உலகின் மிக அதிகமான பிறப்பு விகிதம் உடைய நாடு.

பிலிப்பைன்ஸின் மக்கள் தொகையில் சுமார் 80 விழுக்காட்டினர் கத்தோலிக்கர்கள்.

இந்த சட்டத்தை ஆதரித்ததற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் பெனிக்னோ அக்வினோ உட்பட நாட்டின் அரசியல்வாதிகளைத் திருச்சபை கண்டித்திருக்கிறது.