'மலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்'

  • 9 ஏப்ரல் 2014
'மலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்' படத்தின் காப்புரிமை
Image caption 'மலேசிய விமானத்தில் இருந்து மேலும் சமிக்ஞைகள்'

காணாமல் போன மலேசிய விமானத்தின் பதிவுக் கருவியில் இருந்து வந்திருக்ககூடியது என்று நம்பப்படுகின்ற மேலும் இரு சமிக்ஞைகளை கண்டுபிடித்திருப்பதாக அந்த எம்.எச்.370 விமானத்தை தேடும் பணியின் ஆஸ்திரேலிய ஒருங்கிணைப்பாளர் தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலிய கடற்படைப் படகால் கட்டியிழுத்துச் செல்லப்படும் சமிக்ஞைகளை தேடும் கருவி, ஸ்திரமான, குறிப்பான, தெளிவான சமிக்ஞைகளை கண்டறிந்திருப்பதாகவும், அவை ஐந்தரை முதல் 7 நிமிடங்கள் வரை நீடித்திருந்ததாகவும் அன்குஸ் ஹௌஸ்டன் தெரிவித்திருக்கிறார்.

வார இறுதியில் இரு சமிக்ஞைகள் அறியப்பட்டிருந்தன.

இவை நான்கும் நீரின் அடியில் தேடுதல் நடத்துவதற்கான ஒரு குறித்த சிறிய பரப்பை நிர்ணயிக்க உதவும்.

தாம் சரியான இடத்தில்தான் தேடுகிறோம் என்று தாம் நம்புவதாகவும், விமானம் இருக்கும் இடத்தை உறுதி செய்வதற்கு முன்னதாக அதன் சிதிலங்களை அடையாளம் காணவேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.