விமானத்தை தேடும் பணி தொடருகிறது

விமானத்தை தேடும் பணி தொடருகிறது படத்தின் காப்புரிமை AFP
Image caption விமானத்தை தேடும் பணி தொடருகிறது

5 வாரங்களுக்கு முன்னதாகக் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கப்பல்களும், விமானங்களும் தொடர்ந்து தேடி வருகின்றன.

இந்து சமுத்திரத்தின் தென்பகுதியில், இலகுவில் சென்றடைய முடியாத அந்தத் தேடும் பகுதியின் பரப்பு வரவரக் குறைந்து வருகிறது.

தாம் பெற்ற சமிக்ஞைகள், காணாமல் போன அந்த விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்துதான் வருகின்றன என்று தேடும் குழு மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் டொனி அபொட் கூறியுள்ளார்.

ஆனால், அந்தத் தேடும் பணி மிகவும் சிரமமானது என்றும், அது நீண்ட நாட்களுக்கு தொடர வேண்டியிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்குக்கு சென்று கொண்டிருந்தபோதே இந்த விமானம் காணாமல் போனது.