ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோழிகளைக் கொல்ல உத்தரவு

ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோழிகளைக் கொல்ல உத்தரவு படத்தின் காப்புரிமை AP
Image caption ஒரு லட்சத்துக்கும் அதிகமான கோழிகளைக் கொல்ல உத்தரவு

ஜப்பானில் கடந்த மூன்று ஆண்டுகளில் முதல் தடவையாக பறவைக் காய்ச்சல் நோய் பரவியிருப்பது குறித்து ஆரம்பக்கட்ட சோதனைகள் உறுதி செய்ததை அடுத்து, அங்கு இரண்டு பண்ணைகளில் உள்ள ஒரு லட்சத்துப் பன்னிரெண்டாயிரம் கோழிகளை கொல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜப்பானின் தென்பகுதியில் குமமோட்டோ பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் ஹெச் 5 வகை பறவைக் காய்ச்சல் தொற்றியுள்ளது. அங்கு 1000 கோழிகள் இறந்துள்ளன.

அந்தப் பண்ணையில் இருந்து 3 மைல்கள் வட்டத்துக்குள் அந்தக் கோழிகள் மற்றும் அவற்றின் முட்டைகள் கொண்டுசெல்லப்படுவதற்கு விவசாய அமைச்சு தடை விதித்துள்ளது.

பெரிய அளவில் நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவையின் தலைமைச் செயலர் கூறியுள்ளார்.